×

குமாரசுவாமி கோயில் விசாக திருவிழா கொடியேற்றம்

தக்கலை, மே 10: வேளிமலை குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், கலச பூஜை ஆகியன நடந்தது. இதையடுத்து கொடியேற்றத்துக்கான பூஜைகளை வஞ்சியூர் அத்திரமடம் தந்திரி பிரகாஷ் போற்றி நடத்தினார். தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. தேவசம் போர்டு தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் மோகனகுமார், கோயில் கமிட்டி நிர்வாகிகள் மாதவன்பிள்ளை, பிரசாத், சுனில், பா.ஜ. மாவட்ட துணை தலைவர் குமரி ரமேஷ் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் இரவு சுவாமியும், அம்மனும் பூப்பல்லக்கில் உலா வருதல் நடைபெறுகிறது. 17ம் தேதி 9ம் திருவிழாவன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 18ம் தேதி 10ம் திருவிழாவில் காலை 9 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் ஆறாட்டு நடக்கிறது.

Tags : festival ,Komalaswamy Temple Vishaka ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!